மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சாரண மாணவர்களின் சுதந்திர தின நிகழ்வுகள்............
நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பில் சாரணிய மாணவர்களினால் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக நடாத்தப்பட்டன.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சாரண மாணவர்களின் ஏற்பாட்டில், கல்லூரியின் சாரணிய மாணவர் பொறுப்பு ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பொதுச்சுகாதார திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் விசேட வைத்திய நிபுணர் Dr.அழகையா லதாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அதிதிகள் சாரணிய மாணவர்களினால் தேசிய கொடிகள் அசைத்து பண்பாட்டு வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. பிரதம அதிதியினால் தேசியக்கொடியேற்றப்பட்டதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சிறப்புரைகளும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
Comments
Post a Comment