லுனுகலை பிரதேச செயலாளராக மட்டக்களப்பு மண்ணில் இருந்து புவனேந்திரன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்....

 லுனுகலை பிரதேச செயலாளராக மட்டக்களப்பு மண்ணில் இருந்து புவனேந்திரன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்....

பதுளை மாவட்டத்தின் லுனுகலை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்த சிசுபாலன் புவனேந்திரன் இன்று (14) அன்று தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளத்தை பிறப்பிடமாக கொண்ட இவர்  முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து லுனுகலை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றி இவர்,  தன் முதல் நியமத்தில் பதுளை மாவட்டத்தில் பசறை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராகவும், பின்னர் வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவரது கடமையேற்கும் நிகழ்வின் இவரது குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டது விசேட அம்சமாகும்.







Comments