மட்டக்களப்பில் வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்வு...............
தேர்தல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் 16 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளை தேருநர் இடாப்பில் பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் தலைமையில் தனியார் கற்கை நிலையத்தில் இன்று (01) இடம் பெற்றது. இந் நிகழ்வில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்கஇ மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் மற்றும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்களுக்கு வாக்களித்தலின் பலத்தையும் அதன் தாற்பரியம் தொடர்பாக இதன் போது அதிதிகளினால் மாணவர்களுக்கு விபரிக்கப்பட்டது.
நாட்டின் புதிய வருடத்தில் இம்முறை தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் திணைக்களத்தினால் இம்முறை வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. இளம் பிரஜைகளை நிகழ்நிலை இணைய வழி ஊடாக தேர்தல் டாப்பில் இவர்களின் பெயர்களை இணைக்கும் முகமாக இந்த விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். இதன் ஒரு கட்டமாக இளம் பிரஜைகளை எதிர்கால தேர்தலுக்கு தயாராக்கும் வகையில் நானும் வாக்களிக்க தயாராகி விட்டேன் எனும் கருப்பொருளுக்கு அமைய பிரதம அதிதிகளால் கைப் பட்டி அணிவிக்கப்பட்டு தேர்தலின் முக்கியத்துவம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் இங்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் நிகழ்வில் கலந்து கொண்ட இளம் பிரஜைகளின் விவரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் தேர்தலின் முக்கியத்துவம் சம்பந்தமான உரைகளும் கலை நிகழ்வுகளும் இங்கு இடம் பெற்றது.
Comments
Post a Comment