தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 9 ஆவது பிறீமியர் லீக் கிறிகெட் சுற்றுப்போட்டி............
மட்டக்களப்பு தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 9 ஆவது பிறீமியர் லீக் கிறிகெட் சுற்றுப்போட்டிகள் 2024 மாசி 24, 25 தினங்களில் இடம்பெற்றது.
குறித்த போட்டியில் ஸீப்ரா லயன்ஸ் அணியினர் மற்றும் கெனடி அணியினர் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியதில் லயன்ஸ் அணியினர் வெற்றியீட்டி 9 ஆவது பிறீமியர் லீக்கை தனதாக்கிக் கொண்டனர்.
போட்டிகள் முடிவடைந்த பின்னர் ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தினால் வருடா வருடம் நடைமுறைப்படுத்தப்படும் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. 5 ஆம் தர புலமைப்பரீட்சைப் பரீட்சையில் சித்தியீட்டிய, க.பொ.த சாதாரணதரம் சித்தியடைந்த மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியாக வெறீயீட்டிய அணிகளுக்கும், வீரர்களுக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்/மட்/தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய அதிபர் பிரபாகரன், மண்முனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஆ.சிவலிங்கம், கிராம அதிகாரி, விளையாட்டு உத்தியோகத்தர், ஆலய பரிபாலன சபையினர், சமூக சேவையாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment