மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 78வது ஆண்டு நிறைவையொட்டி ஹிந்துற் வோர்க்...............
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 78வது ஆண்டு நிறைவையொட்டி ஹிந்துற் வோர்க் மிக விமர்சையாக இடம்பெற்றது.
ஒன்றுபடுவோம் உயர்வோம் எனும் தொனிப்பொருளில் (Hinduite walk) இடம்பெற்ற ஹிந்துவிற் நடைபவனியானது கல்லூரியின் அதிபர் ஏ.பஹீரதன் தலைமையில் (17) ம் திகதி இடம்பெற்றது.
கல்லூரி வளாகத்தில் அமைத்துள்ள தண்டாயுதபாணி ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாட்டினை தொடர்ந்து பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இணைந்து நடைபவணியை முன்னெடுத்திருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரச பாடசாலையாக இந்து கல்லூரி திகழ்வதுடன், இக் கல்லூரியானது தனது 78வது ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு மலர் ஒன்றினையும் வெளியிட்டதுடன், திருகோணமலை இந்துக்கல்லூரி சமூகத்தினரால் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அதிபர் கௌரவிக்கப்பட்டார்.
78 வது ஆண்டு நிறைவையொட்டி இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவரும் நிலையில், முதற்கட்டமாக பாடசாலை பாண்ட் வார்த்திய மாணவர்களுக்கான சீருடை, நடை பவனிக்கான உத்தியோக பூர்வ டிசேர்ட் மற்றும் தொப்பி போன்றவை வழங்கி வைக்கப்பட்டதுடன், நடை பவணிக்கு பழைய மாணவர் சங்க தலைவர் எம்.சதிஸ்குமார் உள்ளிட்ட பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் பங்கேற்று நிகழ்வினை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment