மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 78வது ஆண்டு நிறைவையொட்டி ஹிந்துற் வோர்க்.......

 மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 78வது ஆண்டு நிறைவையொட்டி ஹிந்துற் வோர்க்.......

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 78வது ஆண்டு நிறைவையொட்டி ஹிந்துற் வோர்க் தொடர்பான ஊடக சந்திப்பு பழைய மாணவர் சங்க தலைவர் எம்.சதீஸ்குமார் தலைமையில் இந்துக்கல்லூரியில் (15)ம் திகதி இடம் பெற்றது.
ஒன்றுபடுவோம் உயர்வோம் எனும் தொனிப்பொருளில் (Hinduite walk) ஹிந்துவிற் நடைபவனி இடம் பெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரச பாடசாலையாக இந்துக்கல்லூரி திகழ்வதுடன், இக்கல்லூரியானது தனது 78வது ஆண்டு நிறைவையொட்டி இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் பல்வேறு நிகழ்வுகளை நடாத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இதன் போது கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக பாடசாலை பாண்ட் வார்த்திய மாணவர்களுக்கான சீருடை, நடை பவனிக்கான உத்தியோக பூர்வ டிசேர்ட் மற்றும் தொப்பி போன்றவை ஊடக சந்திப்பின் போது அறிமுகப்படுத்திவைக்கப்பட்டது.
எதிர்வரும் 17ம் திகதி பாடசாலை வளாகத்தில் அமைத்துள்ள தண்டாயுதபாணி ஆலயத்தில் இருந்து காலை 8 மணிக்கு பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இணைந்து நடைபவணியை முன்னெடுக்கவுள்ளனர்.
மேலும் பாடசாலையின் பழைய மாணவர்களினால் பாடசாலைக்கு தேவையான விடயங்கள் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Comments