கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் 76 வது சுகந்திர தின நிகழ்வும் "சுவதரணி மூலிகைப் பயிர் வாரமும்"...............

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில்  76 வது சுகந்திர தின நிகழ்வும் "சுவதரணி மூலிகைப் பயிர் வாரமும்"...............

இலங்கையின் 76 வது சுதந்திர தின நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜீ.அருணன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் ஏனை அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசியகொடியேற்றல், தேசிய கீதம் இசைத்து மரியாதை செலுத்தலோடு ஆரம்பித்த நிகழ்வில் எமது தேசத்தின் சுதந்திரம் பற்றியும் நினைவு கூறப்பட்டது.
தொடர்ச்சியாக வளம்மிக்க நாட்டை உருவாக்கும் நோக்கோடு எமது நாட்டின் பிரதமரினால் முன் மொழியப்பட்ட 'சுவதரணி மூலிகைப் பயிர் வாரம்' எனும் தொனிப்பொருளில் கடந்த 02.02.2024 இல் எமது 16 கிராம சேவகர் பிரிவிலும் ஆரம்பிக்கப்பட்ட மூலிகைக் கன்றுகள் நடும் திட்டத்தின் தொடர்ச்சியாக அலுவலக வழாகத்தினுள் உத்தியோகத்தர்களினால் மூலிகைப் பயிர்கள் நடப்பட்டது.



Comments