கோறளைப்பற்று வாழைச்சேனையில் 76வது சுதந்திரதின நிகழ்வு.....................
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வானது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் (04) திகதி காலை 8.20 மணிக்கு பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், நிருவாக உத்தியோகத்தர் ஜெயக்குமார் புனிதநாயகி, மேலதிக மாவட்ட பதிவாளர் புனிதவதி ஆனந்தன் மற்றும் அலுவலக உள்ளக, வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முதலாவது நிகழ்வாக பிரதேச செயலாளர் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிட அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
மேலும் பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள் மக்களுக்கான சேவையினை எவ்வாறு விரிவு படுத்தமுடியும் என்பதனையும், தேசிய சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தினையும் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார்.
இறுதியாக வளம்மிக்க நாட்டை உருவாக்கும் நோக்கோடு 'சுவதரணி மூலிகைப் பயிர் வாரம்' எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட மூலிகைக் கன்றுகள் நடும் திட்டத்தின் தொடர்ச்சியாக மூலிகைப் பயிர்கள் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment