மட்டக்களப்பில் இருந்து 520 சாரணங்கள் 10வது தேசிய சாரணர் ஜம்போரியில் பங்கேற்பு...
இலங்கையின் 10வது தேசிய சாரணர் ஜம்போரி "மாற்றத்திற்கான தலைமைத்துவம்" எனும் தொனிப்பொருளில் திருகோணமலையில் ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பில் இருந்து 520 சாரணங்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், ஜம்போரியில் பங்குபற்றும் தேசிய சர்வதேச சாரணர் தலைவர்கள் (20)ம் திகதி தொடக்கம் திருகோணமலைக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இதன் போது, 11,500க்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் சாரணர் தலைவர்கள் இதில் பங்குபற்றுகின்றனர்.
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா கல்லூரி மைதானத்தை மையமாக கொண்டு நடைபெறும் இந்த ஜம்போரிக்கு அதன் அருகே காணப்படும் மைதானங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜம்போரியின் அங்குரார்ப்பண வைபவம் நடைபெறவுள்ளது.
இதன் போது, 21ஆம் திகதி தொடக்கம் காலை முதல் இரவு 9.00 மணிவரை பொது மக்கள் ஜம்போரியை பார்வையிட முடியும். ஜம்போரி நடைபெறுவதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Comments
Post a Comment