தாண்டவன்வெளி பங்கின் 400வது ஆண்டு பெருவிழாவில் பங்கு தந்தையாக யூலியன் அடிகளார்- (இறுதிப்பாகம்)
2015ல் அருட்தந்தை G.அலக்ஸ் றொபட் அடிகளார் தாண்டவன்வெளி பங்கின் பங்குத்தந்தையாக கால்பதித்தார். இவரது காலப்பகுதியில் வழிபாடு நடைமுறைகளை தெளிவுபடுத்தி அர்த்தமுள்ளவையாக அமையும் வண்ணம் வழிபாட்டு குழுவை வழிநடத்தினார். அத்துடன் பங்குமனைக்கு முன்னாள் உள்ள பகுதி மழைகாலத்தில் நீர் தேங்கி நிற்பதால் அதனை சீர்செய்வதற்காக கொங்கறீட் இட்டு சீர்படுத்தினார்.
புதிய வின்சன்ட் டி பவுல் சபையினருக்கு புதிய கட்டம் அமைத்துக் கொடுத்து அதனை அவருடைய காலத்தில் திறந்து பாவனைக்கு உட்படுத்தினார். 2015ல் புனிதராக திருநிலைப்படுத்திய புனித ஜோசப்வாஸ் அடிகளாரின் கால்கள் பதிந்த அந்த இடத்தில் ஒரு புதிய செபக்கூடத்தை அமைக்க அடிக்கல் நாட்டியதுடன் 2017ம் ஆண்டு ஜோசப்வாஸ் ஆண்டாக நினைவு கூறப்பட்ட தினத்தில் நினைவு தூபி நிறுயதுடன், பங்குமனைக்கு முன்னாள் 1959ம் ஆண்டில்G.E.K.வம்பேக் அடிகளாரால் நிறுவப்பட்ட லூர்து அன்னையின் கெபி சிதைவடைந்திருந்தை கண்நோக்கி, அதை புது வடிவில் ஆலய இடது புறம் புதிதாக ஸ்தாபித்து திறந்து வைத்தார். இதன் பின் 2017ம் ஆண்டு தன் பணியை தாண்டவன்வெளி பங்கில் முடித்துக் கொண்டு மாற்றலாகி சென்றார்.
மேலுமாக ஆலயத்தில் புதிதாக டிஜிடல் வடிவிலான சிலுவைப்பாதை ஸ்தலங்களை அமைத்து மக்களை இறை பக்தியில் செயற்பட ஒரு சக்தியாக திகழ்தார். இவர் 2020ம் ஆண்டு வரை தன் சேவையை தாண்டவன்வெளி பங்கில் பணியாற்றி விடைபெற்றுச் சென்றார்.
தாண்டவன்வெளி பங்குச்சமூகத்தில் இருந்து பல அருட்தந்தையர்கள், பல அருட்சகோதரிகள் தம் இறைசேவையை வழங்க முன்வந்து இக்காலம் வரை சேவையை அர்ப்பணிப்புடன் வழங்கி வருகின்றனர்.
அருட்தந்தையர்கள்:
1. அருட்தந்தை அம்புறோஸ் அருள்நாயகம்.
2.அருட்தந்தை கிளெமென்ற் அன்னதாஸ்.
3.அருட்தந்தை சிறீதரன் சில்வெஸ்டர். (காலமானவர்)
4.அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் டயஸ்.
5.அருட்தந்தை டெக்ஸ்ர் கிறே. (S.J)
6.அருட்தந்தை மில்ரோய் பெர்ணான்டோ. (S.J)
அருட்சகோதரிகள்:
1.அருட்சகோதரி றோசலின் ஸ்ரனிஸ்லாஸ் - பிரான்சிஸ்கள் கன்னியர் சபை (காலமானவர்).
2.அருட்சகோதரி லில்லிமலர் கார்த்திகேசு - பிரான்சிஸ்கள் கன்னியர் சபை.
4.அருட்சகோதரி செலின் பாத்லட் - பிரான்சிஸ்கள் கன்னியர் சபை.
5.அருட்சகோதரி ஜெரால்டீன் கிறிஷாந்தி - ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபை.
6. அருட்சகோதரி கமலினி - அப்போஸ்தலிக்க கார்மேல் சபை.
இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க தாண்டவன்வெளி ஆலயத்தின் வரலாற்று சுருக்கத்தை எழுத கிடைத்தற்கு முதலில் நான் காணிக்கை மாதாவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், இத்தொகுப்பை எழுதுவதற்கு எனக்கு மிகவும் ஊந்து சக்தியாக இருந்தது அருட்தந்தை சாமிநாதன் அடிகளார் எழுதி 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட எழுவான் புத்தகம் என்பதில் பெருமையுடன் குறிக் கொள்வதுடன், துனையாக தாண்டவன்வெளி காணிக்கை அன்னை ஆலயத்தின் நூற்றாண்டு நினைவு மலரை எனக்கு தந்து உதவிய கொன்சி கில்பட் அவர்களுக்கும் சகல தகவல்களையும் கேக்கும் போதெல்லாம் தந்து உதவிய செல்வராஜா தேவராஜா மற்றும் J.F.மனோகிதராஜ் ஆகியோருக்கும் நன்றிகள்.
- பாலசிங்கம் ஜெயதாஸன்,
- BattiEye இணையதளம் மற்றும் BattiEye YouTube
Comments
Post a Comment