400வது வயது, அருட்தந்தை பொன்னையா ஜோசப் அடிகள் தாண்டவன்வெளி பங்கில்:

400வது வயது, அருட்தந்தை பொன்னையா ஜோசப் அடிகள் தாண்டவன்வெளி பங்கில்:

2001ம், ஆண்டு அருட்தந்தை பொன்னையா ஜோசப் அடிகள் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவர் முதலில்  உடலால் உள்ளத்தால் சோர்வுற்றோருக்கு நிழழாக ஆலயத்தை சுற்றி நிழல் தரும் மரங்களையும்,  பலன் தரும் தென்னை மரங்களையும்  நட்டு அலங்கரித்தார். விவிலிய அறிவை  வளர்க்கும் முகமாக மறையுரைகளை மாற்றியமைத்து  விவிலிய வகுப்புக்களையும் நடாத்தி, ஞாயிறு வார வழிபாடுகளை புதுமெருகூட்டி  வழிபாடுகளில்  மக்கள் ஆர்வமுடன் பங்கெடுக்கச் செய்தார். மேலும் ஆலயம் காலத்திற்கு ஏற்றவண்ணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்து மக்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி பங்கு மக்கள் அனைவரையும்  உள்ளடக்கக்கூடிய பாரிய ஒரு கோயிலை 2002ல் கட்ட ஆரம்பித்தார், இதன் போது பல பிரச்சனைகளை அவர் முகம் கொடுக்க நேறிட்டது,  எல்லோருக்கும் ஏற்படும் பொருளாதார பிரச்சனையும், இவ்வாலயத்தை கட்டும் போது ஏற்பட்டது, அனைத்தையும் தகர்த்தெறிந்து  26-01-2006ல் கட்டி முடித்து வெற்றி கண்டார். இதன் போது பீடத்தில் பின் புறத்தில் இயேசு உயிர்ப்பின் படத்தை மரத்தில் வடிவமைத்து ஆலயத்தை அலங்கரித்த பெருமை அவரையே சாரும்.

இப்புதிய ஆலயம்  ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு, வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டதுடன், இடைக்காலத்தில்  வியாகுல மாதா ஆலயம் என்று அழைக்கப்பட்ட இவ்வாலயத்தை மறுபடியும்  தூய காணிக்கை அன்னை ஆலயம் எனப் பெயரிட்டார். அத்துடன்  அருட்தந்தை  பொன்னையா ஜோசப் அவர்கள் அறிவு வளர்சிக்கு உதவியாக  வாசிகசாலை  ஒன்றையும் அமைத்தார் பின்னர் அவர் மறைமாவடடக குருமுதல்வராக நியமிக்கப்பட்டு  ஆயரில்லம் சென்றார். 

அருட்தந்தை இன்னாச்சி ஜோசப் அடிகள் தாண்டவன்வெளி பங்கில்:

2012ல் அருட்தந்தை இன்னாச்சி ஜோசப் அடிகளார்  பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். அவர் புதிய ஆலயத்தில் நிறைவுபெறாதிருந்த சில வேலைகளை செவ்வனே  செய்து முடித்து உடைக்கப்பட்ட முன் சுற்று மதிலுக்குப் பதிலாகப் புதிய மதிலையும் கட்டிமுடித்தார். இதன் போது அவருக்கு சிறு விபத்து ஏற்பட்டது, இருந்த போதிலும் தன் பணியை சிறப்பாக ஆலயத்திற்கு செய்து வந்தார். அத்துடன் ஆலய பாவனைக்காக புதிதாக ஒரு பாரிய மின்பிறபாக்கி பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் கொள்வணவு செய்ய வித்திட்டார். 

2009ல் முத்திப்பேறு பெற்ற யோசப்வாஸ்  அடிகளாரின்  விண்ணகப்பிறப்பின் 300 ஆண்டு சிறப்பிக்கப்ட்டதுடன், 2011ல் ஆலத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த புனித பற்றிமா அன்னையின் திருச்சுருவம் சற்று முன்னால் கொண்டு வரப்பட்டது. இதன் பின் இவர் இடமாற்றாலகி சென்றார்.


அருட்தந்தை  கிளெமென்ற் அன்னதாஸ் அடிகள் தாண்டவன்வெளி பங்கில்:

2012ல் அருட்தந்தை  கிளெமென்ற் அன்னதாஸ் அவர்கள் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். தாண்டவண்வெளி  பங்கில் இருந்து குருத்துவத்திற்கு அழைக்கப்பட்டு  தாண்டவண்வெளி பங்கில் முதலாவது பங்கு மகனாக  தாண்டவண்வெளி பங்கில் பணி செய்ய கால் பதித்த தலைமகனாக வந்தார். அப்போது தாண்டவன்வெளிப் பங்கு ஆழ்ந்த விசுவாசம் கொண்ட பொது நிலையினரையும் அவர்களின் பங்களிப்புக்களையும் பல நற்கருணைப் பணியாளர்களையும் கொண்ட ஒரு பங்காகவும் திகழ்ந்தது.
இவரின் காலத்தில்  ஆலயத்துடன் இணைந்ததாக நற்கருணை சிற்றாலயம் அமைக்கப்பட்டது. 2013ல்  பங்கு மக்களின் உதவியுடன் முன்றலில் பயணிகள் வழிபடுவதற்காக  அன்னையின் சுருவம் வைக்கப்பட்டது, கள்ளியங்காடு சேமக்காலையில்  உயிர்ப்பின் உறைவிடத்திற்கு முன்னால் உயிர்த்த  இயேசுவின் திருச்சுருவம்  வைக்கப்ட்டது, இடது புறம் ரொசைறோ  வீதியில் அன்னை மரியாளின் சுருபமும் வைக்கப்பட்டது.
இத்துடன் முதல் முதலில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் மறைக்கல்வி மாணவர்களின் பேன்ட் வாத்தியகுழுவை  தாண்டவன்வெளி பங்கில் உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். அத்துடன் இறை மக்களை ஆன்மீகத்தில் மேலும் வளர்த்து விட்டதுடன், சிறந்த பக்தியையும் மக்களிடையே பகிரச்செய்ததார். இவர் 2014 வரை தன் இறைபணியை தண்டவன்வெளி பங்கிற்கு பணியாற்றி விடைபெற்றார்.
நற்கருணை சிற்றாலயம் 

உயிர்ப்பின் உறைவிடம் 


Comments