ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் ஒருங்கிணைப்பின் கீழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டமானது வர்த்தக இராஜாங்க அமைச்சரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு முன் அனுமதி பெற்றதுடன், புதிய திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், ஆசிரியர் இடமாற்றங்கள், மாணவர்களின் கல்வி நிலைகள், பிள்ளைகளுக்கான போசாக்கு நிலையை அதிகரித்தல், அனுமதி அற்ற குழாய் கிணறுகளை நிறுத்தல் மற்றும் செய்து முடிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் விளையாட்டு மைதானங்களை அமைத்தலுக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன,
மேலும் 26 குடும்பங்களுக்கான காணி உரிமங்கள் வழங்குவதற்கும், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் வேலைத்திட்டங்களுக்கு ஏறாவூர் நகரசபையின் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் யானை வேலி அமைத்தல், மின்சாரம் மற்றும் நீர் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு கால அவகாசம் வழங்குதல், வீட்டுத்திட்ட வீடுகளில் பாவனையில் இல்லாத வீடுகள் தொடர்பான பிரச்சினைகள், மேய்ச்சல் தரையின் தேவை தொடர்பாக பேசப்பட்டு மேலும் சில பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டு கூட்டம் நிறைவிற்கு வந்திருந்தது.
Comments
Post a Comment