மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் 2024 ம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர் கழகம் புனரமைப்பு..............
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் 2024 ம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர் கழகம் புனரமைப்பு..............
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச பிரிவின் 2024ம் ஆண்டுக்கான இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகப் புனரமைப்பு பொதுக் கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் த.சபியதாஸ் அவர்களின் ஒழுங்கமைப்பில், சம்மேளன தலைவர் தி.ஜெகநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் நா.குகேந்திரா, மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் நிஷாந்தி அருள்மொழி, மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் யுவப்பிரகாஷ், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கு.துஷாந்தன் மற்றும் இளைஞர்கள், யுவதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அதனை தொடர்ந்து இடம்பெற்ற புதிய நிர்வாகத் தெரிவில் தலைவராக ஞா.சஞ்ஜீவன், பொருளாளராக கு.சுவர்ணியா மற்றும் அமைப்பாளராக கு. இன்பலோஜன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிருவாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது.
அத்துடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு - கேகாலை இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Comments
Post a Comment