"ஸ்கொட் uk" அமைப்பின் நிதி அனுசரணையில் LIFT நிறுவனத்தினால் மட்டக்களப்பில் வெள்ள நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது...............

 "ஸ்கொட் uk" அமைப்பின் நிதி அனுசரணையில் LIFT நிறுவனத்தினால் மட்டக்களப்பில் வெள்ள நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது...............

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் வழிகாட்டலிலும், LIFT நிறுவனத்தின் நிதிப்பணிப்பாளர் ஜெபராஜின் தலைமையிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட கருவப்பங்கேணி, ஜெயந்திபுரம், பாரதிபுரம், கோட்டைமுனை, கல்லடி முகத்துவாரம், திருச்செந்தூர் மற்றும் வீச்சுக்கல்முனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 150 குடும்பங்களிற்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதாகவும் இதற்கான நிதி இங்கிலாந்து நாட்டைச் சேரந்த "தமிழ் பேசும் மக்களின் நிரந்தர நிறுவனம்" எனப்படும் ஸ்கொட் அமைப்பினால் வழங்கப்பட்டதாகவும் இத் திட்டத்தின் இணைப்பபாளர் கண்ணன் தெரிவித்தார்.
ஒவ்வொன்றும் சுமார் 4000 ருபாய் பெறுமதியான இப்பொதியில் 5kg அரிசி, 3kg மா, 1/2kg சீனி, 1/2kg பருப்பு, அரை லீட்டர் தேங்காய் எண்ணை, 1/2kg சோயா, 600g சமபோஷ, 200g பால் மா, 100g தேயிலை, 400g உப்பு ஆகிய 10 அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இப்பொதிகள் LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரனினால் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்திடம் கையளிக்கப்பட்டு பின்னர் LIFT நிறுவனத்தின் உத்தியோகத்தர்களால் குறித்த கிராம சேவைகள் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் மக்களிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Comments