NVQ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ..........
தேசிய பயலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் 52 ஆவது வருட பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தேசிய பயலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் ஊடாக தேசிய தொழிற்தகமைசார் (NVQ) சான்றிதழிற்கான தொழிற்பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான NVQ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் முகாமையாளர் எஸ்.ஏ.எம்.சாலீம் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் மற்றும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரீ.ஸ்டீப் சஞ்ஜீவ் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், பராமரிப்பாளர் (Caregiver), குழந்தை பராமரிப்பாளர் (General Childe Care), மற்றும் ஏனைய தொழிற்பயிற்சி நெறிகளுக்குமாக மொத்தமாக 95 பயலுநர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment