LIFT நிறுவனத்தின் புதிய வேலைத்திட்டம் தொடர்பான அறிமுகக் கருந்தரங்கு..........

 LIFT நிறுவனத்தின் புதிய வேலைத்திட்டம் தொடர்பான அறிமுகக் கருந்தரங்கு..........

LIFT நிறுவனத்தினால் 2024 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் செயற்படுத்தப்படவிருக்கும் புதிய வேலைத்திட்டம் தொடர்பான அறிமுகக் கருந்தரங்கு 10.01.2024 திகதி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளைஞர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதனூடாக வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுத்தல் எனும் இவ் வேலைத்திட்டத்தில் 900 மாணவர்களுக்கு “கருத்துச் சுதந்திரமும் சமூகப் பொறுப்புடன் கூடிய ஊடக செயற்பாடுகளும்” எனும் தலைப்பில் விழிப்புணர்வுக் கருந்தரங்குகள் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா முரளிதரனும், சிறப்பு அதிதிகளாக HELVETAS நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஹசந்தி கஹந்தவெல, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜதீஸ்குமார், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான மாவட்ட இணைப்பாளர் றிஸ்வி, மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பாளர் வ.ஜீவானந்தன் ஆகியோரும், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், பல்வேறு அரச திணைக்களப் பிரதிநிதிகள், HELVETAS மற்றும் LIFT நிறுவன உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.


Comments