வடகிழக்கு இந்துக்கல்லூரிகளை இணைக்கும் மட்டக்களப்பு Hinduite Walk………….
யாழ்/கொக்குவில் இந்துக்கல்லூரி
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 78வது ஆண்டை முன்னிட்டு மட்டக்களப்பு இந்துக்கல்லூரி வட கிழக்கில் இருக்கும் இந்துக்கல்லூரிகளை இணைத்து ஒரு நடைபவணியை Hinduite Walk எனும் பெயரில் நடாத்தவுள்ளதாக பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவர் மு.சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
1946ம் ஆண்டு மாசி மாதம் 01ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு இந்துக்கல்லூரி 2024ம் ஆண்டு தன் 78 ஆண்டை கொண்டாடவுள்ளது. இதற்கான பல வேலைத்திட்டங்களை நடாத்துவதற்காக பழைய மாணவர்கள் சங்கம் முன்னின்று செயற்படவுள்ளது. இதற்கமைய மாசி-02ம் திகதி பாரிய அளவில் ஓர் இரத்ததான நிகழ்வை தொடக்கி வைப்பதுடன், எதிர்வரும் மாசி 17ம் திகதி Hinduite Walk எனும் பெயரில் ஒரு நடைபவணியையும் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த நடைபவணியில் வடகிழக்கில் பல வருட காலமாக காலூண்றி கல்விச்சேவை ஆற்றிவரும் இந்துக்கல்லூரிகளை தம்முடன் இணைத்து இந்த நடைபவணியை நடாத்தவுள்ளது. இதற்காக மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க தலைவர் மு.சதீஸ்குமார், செயலாளர் இரா.சிவநாதன், உபதலைவர் க.ரஜனிகாந், உறுப்பினர்களான நா.தனஞ்சயன் மற்றும் ம.அன்னதாஸ் ஆகியோர் ஒன்றினைந்து யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, தெல்லிப்பழை இந்துக்கல்லூரி, சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் வாழைச்சேனை இந்துக்கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று Hinduite Walk நடைபவணிக்கான அழைப்பிதழை வழங்கி அவர்களை அன்புடன் அழைத்துள்ளனர்.
வாழைச்சேனை இந்துக்கல்லூரி
இது வரை காலத்திலும் நடைபெறாத ஒரு புதுப்பொலிவுடன் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்த வரும் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் செயற்பாடுகள் பாரட்ட தக்கதாக அமைகின்றதாக பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்ட வருகின்றனர்.
தெல்லிப்பழை இந்துக்கல்லூரி
Comments
Post a Comment