மட்டக்களப்புக்கான ரயில் சேவையும் ரத்து..............
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பெய்து வரும் அடை மழை வெள்ளம் காரணமாக மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு – கொழும்பு ரெயில்வே வழித் தடத்தில் வெலிக்கந்தைக்கும் புணாணைக்கும் இடைப்பட்ட பகுதியில் வெள்ள நீர் கரை புரண்டு பாய்வதால் புகையிரதம் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி புதன்கிழமை 10.01.2024 இரவு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் இரவு நேர அஞ்சல் ரயிலும், இரவு 07.15க்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் அஞ்சல் ரயிலும் புறப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே புதன்கிழமை நண்பகல் தொடக்கம் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் சகல விதமான வாகனப் போக்குவரத்துக்கும் மறு அறித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.
Comments
Post a Comment