மட்டக்களப்பில் தமிழ் கலைஞர்களுக்கு மகுடம் சூட்டும் மாபெரும் விழா............
இலங்கையில் உள்ள தமிழ் கலைஞர்களுக்கு மகுடம் சூட்டும் மாபெரும் விழா மட்டக்களப்பில் நடைபெற்றது.
தமிழ் கலைஞர்களுக்கு மகுடம் சூட்டும் விழாவானது வேல்ஸ் நடன ஸ்ருடியோ ஸ்தாபகர் எஸ்.கிருஸ்ணா தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று (20) திகதி மிகப்பிரமாண்டமாக இடம் பெற்றது.
கலைத்துறையில் சர்வதேச மட்டம் மற்றும் தேசிய மட்டத்ததில் சாதனை படைத்த 48 தமிழ் கலைஞர்களுக்கு இதன் போது கெளரவம் வழங்கி மகுடம் சூட்டப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண சபையின் செயலாளர் எம்.கோபாலரட்ணம் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கலந்த சிறப்பித்திருந்தனர்.
இதன் போது சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் இயல் இசை நாடகம் சினிமா மற்றும் பல்துறையில் சாதனை படைத்தவர்களின் கண்கவர் நடனங்கள், பாடல், பாரம்பரிய கலைநிகழ்வுகள் என்பன அரங்கேற்றப்பட்டது.
உலக சாதனை படைத்த மற்றும் ZEE தமிழ் சரிகமபா போட்டியில் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த கலைஞர்களுக்கும் இதன் போது மகுடம் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment