கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா..............
உழவர் திருநாளை சிறப்பிக்கு விசேட தைத்திருநாள் விழா கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று (15) திகதி இடம் பெற்றது.
சங்கே முழங்கு சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பொ.டிமலேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.க.சச்சிதானந்த குருக்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் கலந்து சிறப்பித்துள்ளார்.
தமிழர் போற்றும் தைத்திருநாள் நிகழ்வில் வில்லுப்பாட்டு, பக்தி நடனம், குருத்துப்பின்னுதல், கிராமிய பாடல்கள், சிறப்பு பட்டிமன்றம் போன்ற கலை, கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் இதன் போது இடம் பெற்றது.
இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி, கலாநிதி முருகு தயாநிதி என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment