"பல்சமயங்களாக ஒன்றிணைந்து உழவர்களுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துவோம்" - பல்சமய ஒன்றியத்தின் ஐக்கிய பொங்கல் விழா.....

 "பல்சமயங்களாக ஒன்றிணைந்து உழவர்களுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துவோம்" - பல்சமய ஒன்றியத்தின் ஐக்கிய பொங்கல் விழா.....

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஐக்கிய பொங்கல் விழா மட்டக்களப்பில் இடம்பெற்றது."பல்சமயங்களாக ஒன்றிணைந்து உழவர்களுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்சமய ஐக்கிய பொங்கல் விழா ஆரையம்பதி சிகரம் கிராமத்தில் இன்று (22) திகதி வெகு விமர்சையாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் முன்னால் இயக்குனரும் மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஆலோசகருமான அருட்தந்தை ஏ.யேசுதாசன் அடிகளார் அவர்களின் வழிகாட்டலில் பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கே.ஜெகதாஸ் அடிகளார், உப தலைவர் மொகமட் சாஜஹான் மௌலவி, அமெரிக்கன் சிலோன் மிசன் குரு முதல்வர் அருட்பணி எம்.லூக்கேயன் மற்றும் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் சமாதான செயற்திட்ட இணைப்பாளர் இக்னேசியஸ் கிறிஸ்டி, பல்சமய ஒன்றியத்தின் நிருவாக குழு உறுப்பினர்கள், பிரதேச பல்சமய குழுக்களின் உறுப்பினர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
ஆரையம்பதி பிரதேச பல் சமய குழுவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற ஐக்கிய பொங்கல் விழா நிகழ்வில் பல்சமய தலைவர்களாக ஒருங்கிணைந்து பொங்கல் பானைக்கு அரிசி போட்டு, பொங்கல் பொங்கியதுடன், பொங்கலின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையிலான சைவப் புலவர் ஞானசூரியம் சிவானந்த ஜோதி அவர்களின் உரை மற்றும் ஆன்மீக அதிதிகள் உரைகள் என்பன இடம்பெற்று, நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.







Comments