மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல்............

 மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல்............

மட்டக்களப்பு நகர்பகுதி மற்றும் பிரதான, சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

நகர் பகுதியினை அழகுபடுத்தி சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் தெடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கருத்துகள் பரிமாறப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் எதிர்வரும் பருவ பெயர்ச்சியில் வெள்ளம் ஏற்படாத வண்ணம் வடிகாண்களை உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை எவ்வாறு மேம்படுத்துவது தொடர்பாக துறைசார் நிபுனர்கள் கருத்து பரிமாறினர். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர் பி.மதனவாசன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகார்கள், மாவட்ட சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகானந்தராஜ், அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், முதலிட்டாளர்கள் மற்றும் சுற்றுலா துறை சார் சேவை வழங்குனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






Comments