புதுவருட நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது...............

 புதுவருட நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது...............3

அரசாங்கத்தின் நிருவாக சுற்றறிக்கைக்கு அமைவாக 2024ம் ஆண்டின் கடமை செயற்பாட்டினை ஆரம்பிக்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நேற்று (01) திங்கட் கிழமை சுப நேரம் காலை 09.00 மணிக்கு ஆரம்பமானது.
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த புதிய ஆண்டினை வரவேற்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூறும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் நடைமுறை ஆண்டிற்கான சத்தியப்பிரமாணமும் நிறைவேற்றப்பட்டது.




Comments