தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் கல்லடியில் திறந்து வைப்பு..............
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் (18) மட்டக்களப்பு கல்லடியில் திறந்து வைக்கப்பட்டது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், கட்சியின் உபதலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவருமான ஜெய சரவணா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகள் வரவேற்கப்பட்டு கட்சி தலைமையகம் திறக்கப்பட்டதுடன், கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அதனை தொடர்ந்து கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கட்சி முக்கியஸ்தர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.
Comments
Post a Comment