மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம், புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது........
மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம், புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது........
மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் மற்றும் 2024 ஆண்டுக்கான நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது
தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் பிரதான ஆலோசகரும் மட்டக்களப்பு பிரதான சிறைச்சாலை அத்தியட்சகுருமான என்.பிரபாகரன் கலந்து கொண்டார் .
2024 ஆண்டுக்கான நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவில் தலைவராக செரி நிறுவன இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர் வி.இ.தர்ஷனும், செயலாளராக மட்டக்களப்பு சிறைச்சாலை புனர்வாழ்வு உத்தியோகத்தர் சுசிதரனும், பொருளாளராக மட்டக்களப்பு சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதீபா ஜெபஸ் உட்பட உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்
சங்கத்தின் யாப்பு திருத்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment