செங்கலடி வந்தாறுமூலை தெற்கு செட்டியார் வீதி காப்பெட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்......

செங்கலடி வந்தாறுமூலை தெற்கு செட்டியார் வீதி காப்பெட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்......

ஏறாவூர்பற்று செங்கலடி வந்தாறுமூலை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 2.3km நீளமான செட்டியார் வீதியானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 75 மில்லியன் ரூபாவில் காப்பெட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தினை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் ஆரம்பித்துவைத்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தின் கள உத்தியோகத்தர்களான சந்திரகுமார், நவரத்தினம் திருநாவுக்கரசு, கிராமிய குழு தலைவர் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், தொழில்நுட்ப உத்தியோகத்தர் பரிதிகுமாரன், பிரதேச மகளீர் அணிச் செயலாளர் கவிதா, பிரதேசக்குழுத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சிவா ஸ்ரீ காந்தன் உட்பட முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments