இலங்கை மெதடிஸ்த திருச்சபை வடக்கு - கிழக்கு திருமாவட்ட அவைத்தலைவர் நியமன வழிபாடு...........

 இலங்கை மெதடிஸ்த திருச்சபை வடக்கு - கிழக்கு திருமாவட்ட அவைத்தலைவர் நியமன வழிபாடு...........

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 14வது வடக்கு - கிழக்கு திருமாவட்ட அவை தலைவராக அருள்திரு. அருளானந்தம் சாமுவேல் சுபேந்திரன் அவர்கள் நியமனம் பெறும் வழிபாட்டு நிகழ்வின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
மெதடிஸ்த திருச்சபையின் திருப்பேரவை தலைவர் அருள்திரு டபிள்யூ.பீ.எபநேசர் ஜோசப் அவர்களினால் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சத்திய பிரமாண நிகழ்வு புளியந்தீவு மெதடிஸ்த தேவாலயத்தில் (28)ம் திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், வட கிழக்கு திருமாவட்ட அவை உறுப்பினர்கள், திருப்பணியாளர்கள், போதகர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
1994ம் ஆண்டில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் திருப்பேரவையில் இணைந்து இறைபணிக்காக தம்மை அர்ப்பணித்து குருவாக, முகாமைக்குருவானவராக, வடக்கு - கிழக்கு திருமாவட்ட அவை செயலாளர் என பல பொறுப்புக்களில் இறைபணியினை மேற்கொண்டு வந்துள்ள அருட்சகோதரர் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 14வது வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை தலைவராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Comments