திருபாலத்துவ சபையின் திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு திருப்பலி............

 திருபாலத்துவ சபையின் திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு திருப்பலி............

திருபாலத்துவ சபையின் திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு திருப்பலி  மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க திரு அவைகளிலும் சிறப்பிக்கப்பட்டது .

கத்தோலிக்க திருச்சபையினால் 1922 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு கத்தோலிக்க திருச்சபையில் சிறுவர்களுக்கென திருபாலத்துவ சபை ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு, நூற்றாண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், கத்தோலிக்க திருச்சபை  விசேட விதமாக திருபாலத்துவ சபையின் திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு விழாவினை சிறப்பித்தது.

விழாவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையின் வழிகாட்டலின் 'துயவர்களாவதே எமது எதிர்பார்ப்பு' எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க திரு அவைகளில் விசேட ஞாயிறு திருப்பலி  இடம்பெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் திருபாலத்துவ சபையின் திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு திருப்பலி மட்டக்களப்பு டச்பார் புனித இன்னாசியார் ஆலயத்தில் பங்கு தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு விசேட திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.






Comments