மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை - மடக்கிப்பிடித்த மக்கள்........

 மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை - மடக்கிப்பிடித்த மக்கள்........



மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் இன்று (11) திகதி காலை மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
கடந்த ஓரிரு தினங்களாக பெய்த மழை காரணத்தால் மட்டக்களப்பில் உள்ள வாவிகள் மற்றும் குளங்களில் நீர் நிறைந்து காணப்படுவதனால் அவற்றிலிருந்து முதலைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் உள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிராம மக்களால் பிடித்து கட்டப்பட்ட முதலையினை மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உதவியுடன் மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் பாதுகாப்பாக மீட்ட முதலையினை மனித நடமாட்டம் அற்ற நீர்நிலையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments