தைப் பூசத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற புதி(ர்)யீட்டு விழா.............

 தைப் பூசத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற புதி(ர்)யீட்டு விழா.............

தைப் பூசத்தினை முன்னிட்டு புதி(ர்)யீட்டு விழா மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்துக்களின் மிக முக்கிய தினங்களில் ஒன்றான தைப் பூசத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகம், மட்டக்களப்பு மாவட்ட பண்பாட்டலுவலகமும், ஸ்ரீ கோட்டடிப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபை, மட்டக்களப்பு தமிழ் விவசாய சமூகம், கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஆகியன இணைந்து நடாத்தும் புதி(ர்)யீட்டு விழா இன்று (25) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
பொது நூலக வளாகத்தில் இருந்து ஸ்ரீ கோட்டடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு புதிர் எடுத்துவரப்பட்டு, பொங்கல் பொங்கி, பூசை வழிபாடுகள் இடம் பெற்றதனைத் தொடர்ந்து, பூசையில் கலந்து கொண்டவர்களுக்கு புதிர் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அண்ணாவிமார், சித்தாந்த பண்டிதர் சைவப் புரவலர் சிவானந்தசோதி ஞான சூரியம், பேராசிரியர் ஜெய்சங்கர், கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் துஷந்தினி, மட்டக்களப்பு தமிழ் விவசாய சமூகத்தின் ஸ்தாபக தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான அ.ரமேஸ், மட்டக்களப்பு தமிழ் விவசாய சமூகத்தின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகர் திருமதி.சிவராணி, நூலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட பண்பாட்டலுவலக உத்தியோகத்தர்கள், ஸ்ரீ கோட்டடிப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
ஆலய நிகழ்வுகளை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





Comments