இடைத்தங்கல் முகாம்களை பார்வையிட்ட அரசாங்க அதிபர் - நிவாரண உதவிகளும் வழங்கிவைத்தார்..............

 இடைத்தங்கல் முகாம்களை பார்வையிட்ட அரசாங்க அதிபர் - நிவாரண உதவிகளும் வழங்கிவைத்தார்..............

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 9 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்றைய (12) திகதி சில இடைத்தங்கல் முகாம்களை பார்வையிட்டதுடன், இடைத்தங்கல் முகாம்களில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை உடன் தீர்த்து வைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன் போது ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வந்தாறுமுலை கணேசா வித்தியாலயத்தின் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 78 குடும்பங்களை சேர்ந்த 255 நபர்களையும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனை பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 48 குடும்பங்களை சேர்ந்த 131 நபர்களையும் மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இடைந்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கான நிவாரண உதவிகளையும் வழங்கி வைத்துள்ளார்.
இடைத்தங்கல் முகாம்களில் நிவாரண உதவிகளை வழங்கி வைத்த நிகழ்வுகளில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஊடகப் பிரிவு அதிகாரி உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.


Comments