பொன்.செல்வநாயகம் எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு..............

 பொன்.செல்வநாயகம் எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு..............



எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்தும், முன்னால் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் அவர்களின் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது.
தமிழ் - சிங்கள மொழிகளிலான "முன்பள்ளிக் கல்வி" எனும் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வானது அரசடி தேவநாயகம் மண்டபத்தில் வைத்திய நிபுணர் வ.வரணீதரன் தலைமையில் (27)ம் திகதி மிகச்சிறப்பாக இடம் பெற்றது.
வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட நிகழ்வானது நூலாசிரியரினால் வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நூல் வெளியீட்டு நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளீதரன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மூ.கோபாலரத்தினம் ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும் சர்வதேச முன் பிள்ளைக் கல்வி அபிவிருத்தி ஆராச்சி நிறுவன பணிப்பாளர் நாயகமும் முன்பிள்ளைப்பள்ளி நிபுணருமாகிய கலாநிதி ஜெயலத் இலங்கக்கோன், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் சீ.பிரகாஷ், கிழக்கு பல்கலைக்கழக ஆரம்ப சௌக்கிய பீட தலைவர் வைத்திய கலாநிதி கே.அருளானந்தம், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வ.கருணைநாதன், பிரதேச செயலாளர் கா.சித்திரவேல், கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம்.மாஹீர், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட நிகழ்வில் கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் கலாநிதி ஓ.கே.குணநாதனின் நூல் வெளியீட்டு உரையினை தொடர்ந்து இரு நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந் நூல்களின் முதல் பிரதியினை தமிழ் சங்கத்தின் தலைவர் சைவப் புரவலர் வீ.ரஞ்சிதமூர்த்தி அவர்கள் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டதுடன், அதிதிகளுக்கு நூலாசிரியரினால் சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிதிகளின் சிறப்புரைகளை தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்புரை இடம் பெற்று, நூல் வெளியீட்டு நிகழ்வு நிறைவடைந்தது.













Comments