கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி ரன்விமன வீடுகள் திறந்துவைக்கப்பு............
2023ம் ஆண்டு விசேட வீட்டு திட்டத்தின் கீழ் சமுர்த்தி ரன்விமன வீடுகள் கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் முசமில் தலைமையில் (19) இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளிடம் வீடுகளை கையளித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகர் பிரிவின் மாவடிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இவ் வீடுகள் அதிதிகளிளால் கையளிக்கப்பட்டது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 7.5 இலட்சம் பெறுமதியான நிதி உதவி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மாவட்ட பிரதம கணக்காளர் எம்.எஸ்.பஸீர், முன்னால் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், உதவி பிரதேச செயலாளர் ரமிஷா, சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், வங்கி முகாமையாளர், சமுதாயஅடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment