மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ள விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினா தாள் ..............

 மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ள விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினா தாள் ..............

 நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினா தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை (10) நடத்தப்பட்ட பரீட்சை  வினாத்தாள், அதற்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் கசிந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால், குறித்த வினாத்தாளை இரத்து செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பாதிக்கப்பட்ட பாடத்திற்கான இரண்டாம் வினாத்தாளுக்கான புதிய பரீட்சை வினாத்தாள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இரண்டாம் தாளுக்கான புதிய திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பின்னர் அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது

Comments