முதியோர் தேசிய செயலகத்தினால், முதியோர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன...............

 முதியோர் தேசிய செயலகத்தினால்,  முதியோர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன...............

முதியோர் தேசிய செயலகத்தினால் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் முதியோர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

முதியோர்கள் தங்கள் வீடுகளில் வசிப்பதற்கான அத்தியவசிய பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், வவுணதீவு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 16 முதியேர்களுக்கு கட்டில்கள், மெத்தைகள் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலக சமுக சேவை திணைக்களத்தினூடாக வழங்கப்பட்டது.

நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், சமூக சேவை உத்தியோகத்தர் சிராணி சிவநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments