கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா.....
மட்டக்களப்பு கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது .
பாடசாலை அதிபர் அருமைதுரை தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சர், சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளையும், பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், உதவி கல்விப் பணிப்பாளர் சாமினி ரவி ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment