ஏறாவூர் பொது நூலகத்தில் கணனி கோடிங் வகுப்புகள்............
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது நூலகங்களுடன் பாடசாலை மாணவர்களைத் தொடர்பு படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கிணங்க ஏறாவூர் நகர சபை நிருவாகத்தின் கீழ் இயங்கிவரும் ஏறாவூர் பொது நூலகத்தில் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கணனி கோடிங் வகுப்புகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் ஆலோசனைக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இம்மாதத்திற்கான வகுப்பு (13) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், நகர சபைத் தவிசாளர் அவ்வகுப்பை நேரில் சென்று பார்வையிட்டார்.
எட்டு தொடக்கம் 13 வயது வரையான மாணவர்களுக்காக எஸ். எல். ரி. ரெலிகொம் மற்றும் ஸ்டெம்அப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட கோடிங் வகுப்பில் வெப் டெவெலப்மெண்ட் (Web development , ஆர்டினோ (Ardiuno) மற்றும் மைக்ரோ பிட் (Micro Bit) ஆகிய விடயங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இவ்வகுப்பு மாதாந்தம் ஒரு சனிக்கிழமை பொது நூலக மண்டபத்தில் இடம்பெறுவதுடன் அதில் இலத்திரனியல் பொறியியலாளர்களான எ.அப்துல் முஹைமின் மற்றும் ஜி.எஸ்.உமைர் அஹ்மத் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment