கல்லடி புதுமுகத்துவாரம் காயத்திரி அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.............
கல்லடி புதுமுகத்துவாரம் காயத்திரி அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.............
மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் காயத்திரி அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதிப் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28)ம் திகதி அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
காயத்திரி தேவஸ்தானச் செயலாளர் தம்பிராசா குணரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலண்டனில் வசிக்கும் சோபனாகாந்தி புஸ்பாகரின் நிதிப் பங்களிப்பில் காயத்திரி அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
இதன் போது காயத்திரி ஆலய உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment