மட்டக்களப்பில் உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன...............

 மட்டக்களப்பில் உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன...............

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்த விசேட செயற்றிட்டத்தின் கீழ், உணவு பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கான பொங்கல் பொதி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லம் மற்றும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் ஒன்றிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்திற்கான உதவி திட்டங்கள் முன்னெடுத்து வருகின்றன.

இச் செயற்றிட்டத்திற்கு அமைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் சிபாரிசுக்கு கல்லடி பிரதேச கிராம சேவையாக பிரிவுகளில் வறுமை கோட்டுக்குட்பட்ட நிலையில் வாழ்கின்ற குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே பொதிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் சாரங்கபாணி அருள்மொழி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், இந்து இளைஞர் மன்றத்தின் பொதுச் செயலாளர் முருகதாஸ், உப செயலாளர் அருணகிரிநாதன் மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.


Comments