மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு காத்தான்குடியில் கௌரவிப்பு...........

 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு காத்தான்குடியில் கௌரவிப்பு...........

மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் தலைவி சல்மா ஹம்சா தலைமையில் நடைபெற்ற நிகழ்வு காப்பகத்தின் பிரதான மண்டபத்தில் (21) திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் நழிமி, காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி நகர சபை செயலாளர் ரிப்கா ஷபீன், காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் பணிப்பாளர் எம்.ஐ.அஜ்வத் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பக மாணவிகளின் நிகழ்வுகள் இதன் போது நிகழ்வை அலங்கரித்ததுடன், காப்பகத்தில் உள்ள பெண்களுக்கான காப்பக அடையாள அட்டை அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments