காத்தான்குடியில் மேல் மாடியொன்றின் மேல் தள சுவர் இடிந்து விபத்து............
மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று (04) காலை மாடி வீடொன்றின், மேல் தள சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் அருகிலிருந்த வீடு சேதமடைந்துள்ள.
காத்தான்குடி 2ம் குறிச்சி போட்டியா வீதிப் பகுதிலேயே காலை 7மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. செரண்டிப் முஸ்தபா என்பவரின் வீடே சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
மேல் மாடியொன்றின் மேல் தள சுவர் இடிந்து வீழ்ந்த வீட்டில், 10 நாட்களுக்கு முன்னரே திருமண நிகழ்வு இடம்பெற்ற நிலையில், சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment