யானை தாக்கி ஒருவர் படுகாயம்................

 யானை தாக்கி ஒருவர் படுகாயம்................

வாகனேரி பகுதியில் வைத்து புதன்கிழமை (03)  யானை தாக்கியதில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டமாவடி - மீராவோடை நூராணியா வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஆப்தீன் எனும் மீன் வியாபாரி வியாபாரத்துக்கு செல்லும் போதே இவ்வாறு யானை தாக்கி படுகாயமடைந்துள்ளார்.

யானை தாக்குதலுக்குள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது



Comments