சிறைச்சாலைகள் திணைக்கள மட்டக்களப்பு உத்தியோகத்தர்களின் மனிதநேயச் செயற்பாடு.................
அண்மையில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாலையடித்தோணா ஶ்ரீமுருகன் வித்தியாலயத்திற்கு இடம்பெயர்ந்த குடும்பங்களிற்கான உலர்உணவுப் பொருட்கள் சிறைச்சாலைகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் (12) திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கல்முனைச் சிறைக்கூட உத்தியோகத்தர்களின் நிதிப்பங்களிப்பிலும், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் வீ.ஜீ.பானுக, சிரேஷ்ட ஜெயிலர் ஜே.சீ.ஹென்றிக் உள்ளிட்ட நலன்புரி் சங்க உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment