கோட்டைக்கல்லாற்றை சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் ஓந்தாச்சிமடம் ஆற்றுப்பகுதியில் தோணி கவிழ்ந்ததில் மாயமாகியுள்ளான்........

கோட்டைக்கல்லாற்றை சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் ஓந்தாச்சிமடம் ஆற்றுப்பகுதியில் தோணி கவிழ்ந்ததில் மாயமாகியுள்ளான்........

(கடோ கபு) களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கோட்டைக்கல்லாறு கிராமங்களை இணைக்கும் பாலத்தில்  தனது  தந்தையுடன் தோணியில் சென்று வீச்சு வலையால் வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட இறுதியாண்டு மாணவன் ஒருவன் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

கோட்டைக்கல்லாறு பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான  கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட  இறுதியாண்டில் கல்வியினை தொடர்ந்து கொண்டிருக்கும் சுசிதரன் தனுஷன் என்ற  மாணவனே அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போயுள்ளார். பல்கலைக்கழக விடுமுறையில் வீட்டிற்கு வந்து நின்ற போதே தந்தையுடன் இவ்வாறு பொழுது போக்காக மீன்பிடிக்கச் சென்று அனர்த்தத்தில் சிக்கியுள்ளார்.

மேற்படி மாணவனை தேடிக்கண்டுபிடிக்கும் நோக்கில் அப் பிதேச மீனவர்கள் தீவிரமாக ஈடுபடுகின்ற போதிலும் கோட்டைக்கல்லாறு தோனா ஊடாக அதிக நீர் கடலில் ஓடுவதால் தேடுதலை மேற்கொள்வதில் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Comments