நாசீவன் தீவு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகள்............

 நாசீவன் தீவு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகள்............

மட்டக்களப்பு, வாழைச்சேனை நாசீவன் தீவு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 475 குடும்பங்களுக்கு பெரண்டினா நிறுவனத்தால் உலருணவுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபர், வாழைச்சேனை பிரதேச செயலகம் என்பன பெரண்டினா நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய உலருணவு வழங்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயானந்தினி திருச்செல்வம், உதவிப் பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், பெரண்டினா நிறுவனத்தின் பிரதி பொதுமகாமையாளர் வி.எம்.ரகிம், அமைச்சரின் அபிவிருத்தி குழு செயலாளர் த.தஜிவரன், கிராமசேவை உத்தியோகத்தர் ம.டிரோன் ஆகியோர்களும் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

Comments