மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரியில் தைப்பொங்கல் விழா..............
மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரியின் பொங்கல் விழா கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி ரீ.கணேசரெத்தினம் தலைமையில் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (17) திகதி மிக சிறப்பாக இடம் பெற்றது.
தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் தைப்பொங்கல் நிகழ்வானது கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
இதன் போது கருத்து தெரிவித்த பீடாதிபதி, பல்சமய மாணவர்கள் கற்கும் எமது கல்லூரியில் இவ்வாறான சமய நிகழ்வுகளின் மூலம் இன, மத நல்லிணக்கத்தை மேம்படுத்த முடியும் என்றார்.
இவ் விழாவில் கல்லூரி மாணவ மாணவிகளினால் கண்கவர் நடனங்கள், பேச்சுக்கல், கவிதைகள், பட்டிமன்றம் என்பன அரங்கேற்றப்பட்டது.
Comments
Post a Comment