மாவளையாறு கைலன் வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு...........
மட்டக்களப்பு புல்லுமலை மாவளையாறு கைலன் வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கும் நிகழ்வு மாவளையாறு சமூக செயற்பாட்டாளர் ந.ராஜரட்ணம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் (03) இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளீதரன் கலந்து கொண்டு பாடசாலை மாணவ மாணவியருக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைத்தார்.
ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவின் சின்ன புல்லுமலையில் உள்ள மாவளையாறு கைலன் வித்தியாலய மாணவர்களுக்கு நௌ வௌவ் சரிட்டி (Now-Wow Charity ) நிதி அனுசரனையில் துவிச்சகர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் அதிகஸ்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலையின் கல்வியை தடையின்றி தொடர்வதற்கு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் பிரதேச மக்களின் போக்குவரத்தை மேம்படுத்த வீதிகள் அமைத்து தருவதுடன் காணி பிரச்சினைகளை தீர்பதற்கு உரிய அதிகாரிகளுக்கு பணிபுரை செய்வதாக கூறினார்.
இந் நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், நௌ - வௌவ் சரிட்டி ( Now - Wow Charity ) நிறுவனத்தின் திட்டபணிப்பாளர் எஸ். சசிகரன், கிராம சேவை உத்தியோகத்தர் பி.சுசிதரன், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment