மண்முனைப்பற்று புதியபிரதேச செயலாளர் வரவேற்பு நிகழ்வு.............

 மண்முனைப்பற்று  புதியபிரதேச செயலாளர் வரவேற்பு நிகழ்வு.............

 மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் ஒன்பதாவது பிரதேச செயலாளராக தனது கடமையினை (08) அன்று தெட்சணகௌரி தினேஷ் அவர்கள்  பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது அவர்களை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் முன்னைநாள் பிரதேச செயலாளர்  ந.சத்தியானந்தி அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன், மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எல்.விவேகானந்தராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெயசந்திரன், கணக்காளர் வி.நாகேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.திவாகரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Comments