மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.......

 மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.......

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மென்பந்து கிரிக்கெட் அணிகளை ஒருங்கிணைத்து, வீரரர்களின் திறமைகளை மேம்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு திறமைகளை அங்கீகரித்து ஊக்குவித்தல் மையத்தில் ஏற்பாட்டில் இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மண்முனை வடக்கு மென்பந்தாட்ட அணியை, தேசிய மட்ட போட்டிக்கு தயார்ப்படுத்தும் வகையில், பெப்ரவரி 16,17 மற்றும் 18ம் திகதிகளில், கொக்குவில் அக்னி விளையாட்டுக் கழக மைதானத்தில் கிரிக்கெட் போட்டியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிக்காக வீரர்களை ஏலம் விடும் நிகழ்வு, மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில், விளையாட்டு திறமைகளை அங்கீகரித்து ஊக்குவித்தல் மையத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

Comments