மட்டக்களப்பு சமூகப் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு பிரசாரம்..............
மட்டக்களப்பு சமூகப் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு பிரசாரம் இன்று வியாழக்கிழமை (04) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நடவடிக்கையில் மட்டக்களப்பு சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி சதாத் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு நகரிலுள்ள அரச பேருந்து தரிப்பிடம் மற்றும் தனியார் பேருந்து நிலையத்தை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு, அங்கு வருகை தந்திருந்த மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
அதே வேளை மது போதைப் பாவனையில் இருந்து முற்றாக விடுதலை அடைய உளவியல் ரீதியான சிகிச்சையும், ஆலோசனையும் வழங்க புதிய கல்முனை வீதி, கல்லடி விமோச்சனா இல்லம் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment